சென்னை: தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்க உள்ள நிலையில், அனைத்து அரசுத்துறை செயலாளர் களும் சென்னையிலேயே இருங்க வேண்டும் என தலைமைச் செயலாளர் இறையன்பு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.
ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் முதல் முழுமையான பட்ஜெட் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 2022-23 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை இன்று காலை 10 மணிக்கு பேரவை மண்டபத்தில் தாக்கல் செய்கிறார்.
சட்டப்பேரவையின் இந்த அமர்வில் காரசாரமான விவாதங்கள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பல்வேறு கேள்விகள், நிதி ஒதுக்கீடுகள், மக்களுக்கு செயல்படுத்தப்பட்டுள்ள திட்டங்கள் குறித்து எம்எல்ஏக்கள் கேள்வி எழுப்பி, அரசிடம் இருந்து பதில் கோருவர்.
இதன் காரணமாக, அனைத்து துறை செயலாளர்களும் சென்னையிலேயே இருங்க வேண்டும் எனவும், துறை செயலாளர்கள் அனைவரும் வெளியூர் பயணத்தை தவிர்க்க வேண்டும் எனவும் தலைமைச் செயலாளர் இறையன்பு ள சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.
அதில், “தமிழக பட்ஜெட் கூட்டத் தொடருக்காக மார்ச் 18 (இன்று) சட்டமன்றம் கூடுகிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். இந்தக் காலகட்டத்தில் உங்கள் இருப்பு அவசியம். எனவே, நீங்கள் தலைமையகத்தில் இருக்குமாறும், சட்டசபை கூட்டத் தொடரின் போது சுற்றுப்பயணத்தை தவிர்க்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள். உங்கள் கட்டுப்பாட்டில் உள்ள துறைத் தலைவர்களுக்கு நீங்கள் இதே போன்ற அறிவுறுத்தல்களை வழங்கலாம்”,என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.