கோவை
சலூன் கடைக்காரர் ஒருவரைக் கொன்றதாக இந்து முன்னணி நிர்வாகி உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோயம்புத்தூர் தெலுங்கு பாளையம் அம்மன் நகரைச் சேர்ந்தவர் சசிகுமார் என்னும் 37 வயது இளைஞர். இவர் அதே பகுதியில் முடிதிருத்தும் கட்சி வைத்துள்ளார். சுமார் 2 ஆண்டுகளுக்கு முன்பு சொக்கம்புதூரை சேர்ந்த இந்து முன்னணி நிர்வாகி ராம்ஜி என்னும் ராமகிருஷ்ணன் மூலம் இளங்கோ என்னும் ஃபைனான்சியரிடம் இருந்து இவர் ரூ.5 லட்சம் கடன் வாங்கி உள்ளார்.
சசிகுமார் இதுவரை கடனை திருப்பி தராமல் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. நேற்று அதிகாலை 2 மணிக்கு சசிகுமார் வீட்டுக்குச் சென்று பணத்தைத் திருப்பி தருமாறு இளங்கோ மற்றும் ராம்ஜி ஆகியோர் வலியுறுத்தி உள்ளனர் ஆனால் சசிகுமார் மறுத்துள்ளதால் அவர்களுக்கு இடையே தகராறு வெடித்தது. இதில் இளங்கோ மற்றும் ராம்ஜி ஆகியோர் சசிகுமாரை கத்தியால் குத்தி உள்ளனர்.
சசிகுமார் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்த நிலையில் கத்தியால் குத்திய இருவரும் தப்பி ஓடி உள்ளனர். காவல்துறையினர் சசிகுமார் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி இளங்கோ மற்றும் ராம்ஜி ஆகியோரைத் தேடிப் பிடித்து கைது செய்துள்ளனர். இந்து முன்னணி நிர்வாகி கைது செய்யப்பட்டது கடும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.