டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 2,503 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டும், 27 பேர் உயிரிழந்துள்ளனர் என மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
மத்திய சுகாதாரத்துறை இன்று காலை 8 மணி நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக மேலும் 2,503 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 29 லட்சத்து 93 ஆயிரத்து 494 ஆக உயர்ந்தது.
அதேபோல், கொரோனா தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 27 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5,15,877 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.20% ஆக குறைந்துள்ளது.
கடந்த 24மணி நேரத்தில் கொரோனா தொற்றில் இருந்து 4,377 பேர் குணமடைந்துள்ளனர். இதன்மூலம் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4,24,41,449-ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் குணமடைந்தோர் விகிதம் 98.72% ஆக உயர்ந்துள்ளது.
நாடு முழுவதும் தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 36,168 பேருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. சிகிச்சை பெறுவோர் விகிதம் 0.08% ஆக குறைந்துள்ளது.
இந்தியாவில் 1,79,91,57,486 கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 4,61,318 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் 77,90,52,383* மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 5,32,232 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளது