டொரன்டோ: கனடாவில் நடந்த சாலை விபத்து ஒன்றில், இந்திய மாணவர்கள் 5 பேர் பலியாகி உள்ளனர். இது பெரும் சேகத்தை ஏற்படுத்திய நிலையில், அதை இந்திய தூதரகம் உறுதி செய்துள்ளது.
கனடாவில் ஒன்ராறியோ நெடுஞ்சாலையில் கடந்த சனிக்கிழமையன்று பயணிகள் வேன் டிராக்டர் டிரெய்லருடன் மோதியதில் ஐந்து இந்திய மாணவர்கள் சாலை விபத்தில் உயிரிழந்ததாக கனடாவுக்கான இந்திய உயர் ஸ்தானிகர் அஜய் பிசாரியா தெரிவித்துள்ளார். இதுகுறித்து டிவிட் பதிவிட்டுள்ளவர், “கனடாவில் இதயத்தை உடைக்கும் சோகம் நடைபெற்றுள்ளது. டொராண்டோ அருகே வாகன விபத்தில் 5 இந்திய மாணவர்கள் சனிக்கிழமை உயிரிழந்தனர். மேலும் இருவர் மருத்துவம னையில் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள், பாதிக்கப்பட்டவர்களின் நண்பர்களுக்கு டொராண்டோவில் உள்ள இந்தியத் தூதரகம் அனைத்து உதவிகளையும் செய்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த விபத்தில் இறந்த இந்திய மாணவர்கள் ஹர்பிரீத் சிங், ஜஸ்பிந்தர் சிங், கரன்பால் சிங், மோஹித் சவுகான் மற்றும் பவன் குமார் என அடையாளம் காணப்பட்டு உள்ளனர். அவர்கள் அனைவரும் கிரேட்டர் டொராண்டோ மற்றும் மாண்ட்ரீல் பகுதிகளில் வசித்து வரும் மாணவர்கள் என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
விபத்து குறித்து தகவலறிந்த Quinte West Ontario Provincial Police (OPP) போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.