புதுடெல்லி:
ராகுல்காந்தியே காங்கிரஸ் தலைவராக வரவேண்டும் என்று சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் கு. செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ., தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், சம்மட்டியின் கடைசி அடியில் கல் உடைகிறது என்பதால் முதல் அடிகள் வீணாணவை அல்ல. வெற்றி என்பது தொடர் முயற்சியின் விளைவுகளே. ராகுல்காந்தியே காங்கிரஸ் தலைவராக வரவேண்டும். வருங்கால பிரதமராகவும் வரவேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.

டெல்லியில் காங்கிரஸின் காரிய கமிட்டி கூட்டத்தில் ராகுல்காந்தி காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்க வேண்டும் என ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் உள்ளிட்ட தலைவர்கள் வலியுறுத்தப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைவர் தேர்தலை முன்கூட்டியே நடத்துவது குறித்து விவாதிக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.