உக்ரைன்:
உக்ரைனுக்கான இந்திய தூதரகம் போலந்துக்கு மாற்றம் செய்யப்படுவதாக வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.
உக்ரைனில் பாதுகாப்பு நிலைமை மிக மோசமடையும் நிலையில் நாட்டின் மேற்குப் பகுதிகளில் தாக்குதல்கள் உள்ளிட்டவற்றைக் கருத்தில் கொண்டு, உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் போலந்துக்கு தற்காலிகமாக இடமாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா நடத்தும் தாக்குதல் நாள்தோறும் தீவிரம் அடைந்து வருகிறது. உக்ரைனின் முக்கிய நகரங்களை குறி வைத்து ரஷ்யா வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில் பல முக்கிய கட்டிடங்கள் உருகுலைந்தன. உக்ரைனை சுற்றி வளைத்த ரஷ்யா, தற்போது தலைநகர் கீவை நெருங்கி உள்ளது. உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பில், கியேவின் புறநகர்ப் பகுதியில் சண்டை கடுமையாகியுள்ளது. தலைநகரைச் சுற்றியுள்ள பல பகுதிகளில் பீரங்கித் தாக்குதல்கள் தொடரும் நிலையில், மக்கள் நாட்டை விட்டு வெளியேறி வெளி நாடுகளில் தஞ்சம் அடைந்து வருகின்றனர். மேலும் பலர் பதுகிடங்களில் பாதுக்காப்புக்காக தங்கியுள்ளனர்.
இதனிடையே துறைமுக நகரமான மரியுபோல் உட்பட நாடு முழுவதும் உள்ள பிற நகரங்களிலும் வெடிகுண்டு தாக்குதல்களை தொடர்ந்து ரஷ்யா நடத்தி வருகிறது. ரஷ்யாவின் ஆக்கிரமிப்புப் படைகள் மரியுபோல் நகரின் மீது ஷெல்களைக் கொண்டு தாக்குகின்றன. உணவு, தண்ணீர் மற்றும் மருந்துகளை கொண்டு வருவதிலும், சிக்கியுள்ள பொதுமக்களை வெளியேற்றுவதிலும் மாரியுபோல் நகரம் பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்த நிலையில் உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் போலந்துக்கு தற்காலிகமாக இடமாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா நாளுக்கு நாள் தாக்குதலில் தீவிரம் காட்டி வருகிறது.
3 முறை பேச்சுவார்த்தை நடத்தியும் தோல்வியில் முடிந்ததால், உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து போர் தொடுத்து வருகிறது. உக்ரைன் மீதான தாக்குதலுக்கு பல்வேறு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், அதையெல்லாம் பொருட்படுத்தாமல் ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனில் வேகமாக மோசமடைந்து வரும் பாதுகாப்பு நிலைமை மற்றும் நாட்டின் மேற்குப் பகுதிகளில் தாக்குதல்கள் உள்ளிட்டவற்றைக் கருத்தில் கொண்டு, உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் போலந்துக்கு தற்காலிகமாக இடமாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அங்கு உள்ள நிலைமையில் ஏற்படும் முன்னேற்றங்களின் அடிப்படையில் மறுபரிசீலனை செய்யப்படும் என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.