சென்னை:
ரவுடிகளை சாதி, மதம், இடம் சார்ந்து அடையாளப்படுத்தக்கூடாது என்று ஆட்சியர்கள் மாநாட்டில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறையினர் மற்றும் வன அலுவலர்கள் மாநாடு கடந்த 3 நாட்களாக நடைபெற்று வருகிறது. இதில் பேசிய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், ரவுடிகள் ஒழிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும், அவர்களை சாதி, மதம், அரசியல் என அடையாளபடுத்தக்கூடாது. ரவுடிகளில் வடசென்னை, மத்திய சென்னை என பிரிவினை செய்வதும் தவறானது. ரவுடிகளை இடம், சாதி, மதம் என அடையாளப்படுத்தக் கூடாது. குடிசைப்பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக அமைச்சர் சொன்னார், இது போன்ற அடையாளப்படுத்தல்கள் கூடாது என்று அவர் கூறினார்.
Patrikai.com official YouTube Channel