டேராடூன்

உத்தரகாண்ட் மாநிலத்தில் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர்கள் தோல்வி அடைந்துள்ளனர்.

உத்தரகாண்ட் மாநிலத்தில் தற்போது சட்டசபைத் தேர்தல் நடந்து முடிவடைந்துள்ளது.  இந்த மாநிலத்தில்  முதல்வர் வேட்பாளராக பாஜக சார்பில் தற்போதைய முதல்வர் புஷ்கர் சிங் தாமி அறிவிக்கப்பட்டிருந்தார்.  தவிரக் காங்கிரஸ் கட்சி சார்பில் ஹரீஷ் ராவத் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

இதில் பாஜக முதல்வர் வேட்பாளரான புஷ்கர் சிங் தாமி தம்மை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரிடம் 6579 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.  காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளர் ஹரீஷ் ராவத் தம்மை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளரிடம் 17500 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளார்.

ஆம் ஆத்மி கட்சி சார்பில் முதல்வர் வேட்பாளராக அஜய் கோதியால் அறிவிக்கப்பட்டிருந்தார்.  அவர் 6,161 வாக்குகள் மட்டுமே பெற்று மூன்றாம் இடத்தை பெற்றுள்ளார்.    கடந்த 3 தேர்தல்களாகத் தொடர்ந்து முதல்வராக இருந்தவர்கள் தோல்வியைத் தழுவுவது இந்த மாநிலத்தில் வழக்கமாக உள்ளது.

இது கடந்த 20132 ஆம் ஆண்டில் அப்போது முதல்வராக இருந்த பி சி கந்தூரியின் தோல்வியில் இருந்து ஆரம்பமாகி உள்ளது  பிறகு 20174 ஆம் ஆண்டு நடந்த சட்ட பேர்வைத் தேர்தலில் அன்றைய முதல்வர் ஹரீஷ் ராவத் இரு தொகுதிகளில் போட்டியிட்டு இரு தொகுதிகளிலும் தோல்வி அடைந்தார்.  தற்போதைய முதல்வர் புஷ்கர சிங் தாமியும் இந்த தேர்தலில் தோல்வி அடைந்துள்ளார்.