மாஸ்கோ: உக்ரைனுக்கு எதிரான போரில் பங்கேற்க ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினருக்கு ரஷ்ய அதிபர் புதின் அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

உக்ரைன்மீது இன்று 14வது நாளாக ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. நேற்று அங்குள்ள மருத்துவமனை மீது ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தியதாகவும், அது போர் குற்றம் என்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குற்றம் சாட்டியிருந்தார். இந்த போரில் ரஷ்யாவுக்கு பேரிழப்பு ஏற்பட்டு உள்ளதாகவும், ஆயிரக்கணக்கான ரஷிய வீரர்கள் உயிரிழந்து இருப்பதாகவும் உக்ரைன் கூறி வருகிறது. ஆனால், அதை ரஷியா மறுத்து வருகிறது.

இந்த நிலையில், உக்ரைனில் நடைபெறும் போரில் பங்கேற்க மத்திய கிழக்கு மற்றும் பிற இடங்களில் ரஷ்ய ராணுவத்துடன் இணைந்து ஈடுபட தன்னார்வ போராளி களை சேர்க்க ரஷிய அதிபர் புதின் ஒப்புதல் வழங்கி உள்ளதாகவும், ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் உள்ளவர்களும் சேரலாம் என்றும்  அழைப்பு விடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.