ஸ்ரீநகர்: காஷ்மீர் அருகே ராணுவ ஹெலிகாப்டர் கீழே விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. அதில் உள்ளவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்திய ராணுவத்துக்கு சொந்தமான சீட்டா வகை ஹெலிகாப்டர் இன்று காலை ஜம்மு- காஷ்மீர் மாநிலம் குரேஸ் செக்டர் பகுதியில் இன்று காலை திடீரென கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. அதிகாலை பனி படர்ந்த பகுதிக்குள் பறந்தபோது விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
விபத்தை தொடர்ந்து, ஹெலிகாப்டருக்குள் இருந்தவர்களை தேடும் பணியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர் என்றும் விபத்துக்கான காரணம் குறித்து ஆய்வு செய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.
Patrikai.com official YouTube Channel