சென்னை
வரும் 2022-23 ஆம் ஆண்டுக்கான தமிழக நிதிநிலை அறிக்கை மார்ச் 18 ஆம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது.
ஒவ்வொரு வருடமும் அகில இந்தியாவுக்கான நிதிநிலை அறிக்கை பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி அன்று மத்திய நிதி அமைச்சரால் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது. இதைப் போல் அந்தந்த மாநிலங்களுக்கான நித் அறிக்கை மாநில சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படுகிறது.
அவ்வகையில் வரும் 2022-23 ஆம் ஆண்டுக்கான தமிழக நிதிநிலை அறிக்கை மார்ச் 18 ஆம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது. தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இந்த நிதிநிலை அறிக்கையை தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்கிறார்
அடுத்த நாளான மார்ச் 19 ஆம் தேதி அன்று தமிழக அரசின் விவசாயத்துக்கான நிதிநிலை அறிக்கை தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. 2022-23 ஆம் ஆண்டுக்கான விவசாய நிதிநிலை அறிக்கையைத் தமிழக வேளாண் அமைச்சர் எம் ஆர் கே பன்னீர் செல்வம் தாக்கல் செய்கிறார்.