சென்னை: ஓமியோபதி, சிஎம்டிஏ, வேளாண்துறை, சீருடை பணியாளர் துறைகளை சேர்ந்தவர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 9,831 இரண்டாம் நிலை காவலர்கள், 1,200 தீயணைப்பு காவலர்கள் உள்ளிட்டோருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின பணி ஆணைகளை வழங்கினார்.
வேளாண் துறையிலுள்ள காலிப் பணியிடங்களுக்கு டி.என்.பி.எஸ்.சி. மூலம் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பணி நியமன ஆணைகளை வழங்கினார். வேளாண்மை – உழவர் நலத் துறையில் 17 தோட்டக்கலை உதவி இயக்குநர், 162 தோட்டக்கலை அலுவலர், 361 வேளாண்மை அலுவலர் ஆகிய பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 6 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை முதலமைச்சர் வழங்கினார்.
சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தில் உதவி திட்ட அமைப்பாளர் மற்றும் திட்ட உதவியாளர் பணியிடங்களுக்கு தேர்வானவர்களுக்கும் பணி நியமன ஆணைகளை முதல்வர் வழங்கினார்.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறையிலுள்ள 47 காலி பணியிடங்களுக்கு தேர்வு செய்யப் பட்டவர்களுக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
குடியரசு திருநாள் விழாவில் கலந்து கொள்ள இயலாத விருதாளர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் .மு.க.ஸ்டாலின் அவர்கள் விருதுகளை வழங்கிச் சிறப்பித்தார்.
பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர் பாரம்பரிய நெல் பாதுகாவலர் விருதுகளையும் – தோட்டக்கலை உதவி இயக்குநர், தோட்டக்கலை அலுவலர், வேளாண்மை அலுவலர் பணியிடங்களுக்கு பணிநியமன ஆணைகளையும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்.
2022-ஆம் ஆண்டிற்கான அவ்வையார் விருது திருமதி கிரிஜா குமார்பாபு அவர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்.