சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டம் 25 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

சென்னை லயோலா கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,

அண்ணா பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்படவுள்ளது. சுமார் 25 ஆண்டுகளுக்கு பிறகு இப்போதுதான் பாடத்திட்டத்தை மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தேசிய கல்விக் கொள்கைக்கு பதிலாக மாநில கல்விக் கொள்கையை உருவாக்க குழு அமைக்கப்பட்டுள்ளது” என்று கூறியதுடன்,  உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய தமிழக மாணவர்கள் உயர்கல்வி பயில அனைத்து உதவிகளையும் தமிழக அரசு செய்யும் என்றும் கூறினார்.