புதுடெல்லி:
லக சாம்பியன்ஷிப், ஆசிய கோப்பை போட்டிகளில் பங்கேற்கப் போவதில்லை என்று இந்தியக் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் தெரிவித்துள்ளார்.

சர்வதேச அரங்கில் பல வெற்றிகளை ருசித்துள்ள நிலையில், ஆறு முறை உலக சாம்பியனான எம்சி மேரி கோம், நாளை தொடங்க உள்ள வரவிருக்கும் ஐபிஏ எலைட் மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் மற்றும் 2022 ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான சோதனைகளில் பங்கேற்பதற்குப் போவதில்லை என்று முடிவு செய்துள்ளார்.

மேரி கோமின் நோக்கம் வரவிருக்கும் குத்துச்சண்டை வீரர்களுக்கு வழங்குவதும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்கான தனது பயிற்சிகளில் கவனம் செலுத்துவதும் ஆகும்.

லண்டன் ஒலிம்பிக் வெண்கலப் பதக்கம் வென்ற மேரி கோம், இந்தியக் குத்துச்சண்டை கூட்டமைப்புக்கு அளித்துள்ள செய்தியில், “இளைய தலைமுறையினர் சர்வதேச அரங்கில் தங்களுக்குப் பெயர் எடுப்பதற்கும், பெரிய போட்டிகளின் வெளிப்பாடு மற்றும் அனுபவத்தைப் பெறுவதற்கும் வாய்ப்பளிக்க உலக சாம்பியன்ஷிப், ஆசியக் கோப்பை போட்டிகளில் பங்கேற்கப் போவதில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், நான் காமன்வெல்த் போட்டிகளுக்கான பயிற்சியில் மட்டுமே கவனம் செலுத்த விரும்புகிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து பேசிய இந்திய குத்துச்சண்டை கூட்டமைப்பின் தலைவர் அஜய் சிங், கடந்த இரண்டு தசாப்தங்களாக மேரி கோம் இந்திய குத்துச்சண்டைக்குச் சிறந்த பங்காற்றி வருகிறார். மேலும் உலகெங்கிலும் உள்ள எண்ணற்ற குத்துச்சண்டை வீரர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தியுள்ளார். அவரது முடிவை நாங்கள் முழுமையாக மதிக்கிறோம், மற்ற குத்துச்சண்டை வீரர்களுக்கு வழிவிடும் முடிவு, அவரது சாம்பியன் குணத்திற்குச் சான்றாகும்” என்று கூறினார்.