கீவ்

ஷ்யா மற்றும் உக்ரைன் இடையே நடந்த 2 ஆம் கட்ட பேச்சு வார்த்தையில் போர் நிறுத்தம் குறித்து எவ்வித முடிவும் எட்டப்படவில்லை.

ரஷ்யப்படைகள் உக்ரைனில் தாக்குதல்கள் தொடங்கி இரண்டாம் வாரத்தை எட்டி உள்ள நிலையில் தெற்கு நகரமான கெர்சனை ரஷ்யா கைப்பற்றி உள்ளது.  தொடர்ந்து 3ஆம் நாளாக கார்கில் நகரில் ரஷ்யப்படைகள் தாக்குதல்கள் நடத்தி வருகின்றன.  உக்ரைன் நாட்டின் தலைநகரை சுற்றி வளைத்த ரஷ்யா அந்நகரை முழுமையாகக் கைப்பற்றவில்லை.

கீவ் நகரில் உக்ரைன் படைகள் ரஷ்யாவுக்குச் சரியான பதிலடி கொடுத்து முன்னேற விடாமல் தடுத்து வருகிறது.   இந்த தாக்குதலால் இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். ரஷ்யா தரப்பில் அணு ஆயுத எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாக கூறப்படுவடஹால் சர்வதேச நாடுகள் ரஷ்யாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்து கட்டுப்பாடுகள் விதித்தன.

இதையொட்டி உக்ரைனுடன் பேச்சு வார்த்தை நடத்த ரஷ்யா முடிவு செய்தது.  பெலாரஸில் கடந்த திங்கள் நடந்த முதல் கட்ட பேச்சு வார்த்தையில் எவ்வித முடிவும் எட்டப்படவில்லை.  ஆகவே நேற்று இரவு மீண்டும் பெலாரஸில் பேச்சு வார்த்தைகளை இரு நாட்டு பிரதிநிதிகளும் தொடங்கினர்.  ஆனால் இந்த பேச்சு வார்த்தையில் போர் நிறுத்தம் குறித்து எவ்வித முடிவும் ஏற்படவில்லை.

 விரைவில் மூன்றாம் கட்ட பேச்சு வார்த்தை நடைபெற உள்ளதாகத் தெரியவந்துள்ளது.  உக்ரைன் தரப்பில், “உக்ரைனில் சிக்கி உள்ள பொதுமக்களைப் பத்திரமாக வெளியேற்றுவது குறித்து மட்டுமே 2ஆம் கட்ட பேச்சு வார்த்தையில் பேசப்பட்டது.   இருநாடுகளும் மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் வழங்க ஒப்புக் கொண்டன.  போரை முடிப்பது குறித்து எவ்வித முடிவும் எட்டப்படவில்லை.” எனத் தெரிவித்துள்ளார்.