சென்னை: தமிழகத்தின் 21 மாநகராட்சிகள் உள்பட நகராட்சி பேரூராட்சி தலைமை பதவிகளுக்கு இன்று மறைமுகத் தேர்தல் நடைபெறுகிறது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்ற வார்டு கவுன்சிலர்கள் மேயர், துணை மேயர், நகராட்சி தலைவர், நகராட்சி துணைத்தலைவர் மற்றும் பேரூராட்சிகளுக்கான தலைவர், துணைத்தலைவர்களை நேர்ந்தெடுக்கின்றனர்.
தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சி பதவிகளுக்கான தேர்தல்கடந்த பிப்.19 ஆம் தேதியன்று நடைபெற்றறு 22ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. தேர்தலில் வெற்றிபெற்ற வார்டு உறுப்பினர்கள் மார்ச் 2ந்தேதி கவுன்சிலர்களாக பதவி ஏற்றனர்.
இதையடுத்து, மேயர் மற்றும் துணை மேயர், மண்டல தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ள நிலையில், திமுக கூட்டணி கட்சிகளுக்கான மேயர், துணை மேயர், நகராட்சி தலைவர், துணை தலைவர், பேரூராட்சி தலைவர், துணை தலைவர் தேர்வுகளுக்கான மறைமுகத்தேர்தல் இன்று (மார்ச் 4ந்தேதி) நடைபெறுகிறது.
இன்று காலை 9.30 மணிக்கு மறைமுகத் தேர்தலுக்கான மன்ற கூட்டம் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் மேயர், தலைவர் பதவிகளுக்கு கட்சிகள் சார்பில் போட்டியிடுபவர்கள் விவரம் வெளியின நிலையில், இன்று அவர்களிடம் இருந்து வேட்புமனுக்கள் பெறப்படும். இதில் ஒன்றுக்கு மேற்பட்டோர் போட்டியிட்டால், வாக்குப்பதிவு நடத்தப்பட்டு, உடனடியாக முடிவுகள் அறிவிக்கப்படும்.
இதனைத் தொடர்ந்து,இன்று மதியம் 2.30 மணிக்கு மாநகராட்சி துணை மேயர் மற்றும் நகராட்சி,பேரூராட்சி துணைத் தலைவர் பதவிகளுக்கான மறைமுகத் தேர்தலுக்கான மன்ற கூட்டம் நடைபெறுகிறது.
இந்த பதவிகளுக்கு வேட்புமனுக்கள் பெறப்பட்டு, போட்டி இருப்பின் வாக்குப்பதிவு நடத்தி முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.
20 மேயர், 15துணைமேயர், 126 நகராட்சிதலைவர் உள்பட 1201 தலைமை பதவிகளுக்கு திமுக போட்டி….