க்னோ

நேற்று நடந்த உத்தரப்பிரதேச சட்டசபை 6ஆம் கட்ட தேர்தலில் 54% வாக்குகள் பதிவாகி உள்ளன.

இந்தியாவின் மிகப் பெரிய மாநிலமான உத்தரப்பிரதேச சட்டசபைத் தேர்தல் தற்போது நடந்து வருகிறது.   ஏழு கட்டங்களாக நடைபெறும் இந்த சட்டசபைத் தேர்தலில் நேற்று ஆறாம் கட்ட வாக்குப்பதிவு நடந்தது.   உபி மாநிலத்தில் 10 மாவட்டங்களுக்குட்பட்ட 57 தொகுதிகளுக்கு நடந்த நேற்றைய வாக்குப்பதிவில் பல முக்கிய தொகுதிகள் இடம் பெற்றன.

நேற்று உத்தரப்பிரதேச முதவர்ல் யோகி ஆதித்யநாத் போட்டியிடும் கோரக்பூர் தொகுதி, உபி மாநில காங்கிரஸ் தலைவர் அஜய்குமார் லல்லு போட்டியிடும் தம்குஹி ராஜ் ஆகிய தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்துள்ளது.   நேற்றைய வாக்குப்பதிவில் முதல்வர் யோகி ஆதித்யநாத் கோரக்பூரில் வாக்களித்தார். 

இந்த தேர்தலில் 54% வாக்குகள் பதிவானதாகக் கூறப்படுகிறது.  இதற்கு முன்பு 2017 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் இந்த 57 தொகுதிகளில் 48 தொகுதிகளை பாஜக கைப்பற்றியது.   ஆனால் தற்போதைய அரசியல் நிலவரப்படி பாஜகவுக்கு அவ்வளவு வெற்றி வாய்ப்பில்லை என மாவட்ட அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.