புதுச்சேரி
புதுச்சேரியில் ரேஷன் அட்டை வைத்திருப்போருக்கு அம்மாநில அரசு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
புதுச்சேரி அரசின் குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
“புதுச்சேரியில் பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா இலவச அரிசி வழங்கும் திட்டத்தின்படி 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மற்றும் மார்ச் ஆகிய 2 மாதத்துக்கான அரசி புதுச்சேரியில் உள்ள அனைத்து சிவப்பு அட்டை தாரர்களுக்கும் நபர் ஒருவருக்கு தலா 5 கிலோ வீதம் அனைத்து பகுதிகளிலும் இலவசமாக அர்சி விநியோகம் நடைபெற உள்ளது.
ஆகவே சிவப்பு அட்டை பயனாளிகள் அனைவரும் வழக்க்கம் போல தங்கள் பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிக்கூடங்கள் மற்றும் சமுதாய நலக்கூடங்களில் இலவச அரிசியை 20.3.2022 தேதிக்குள் பெற்றுக் கொள்ளுமாறு அறிவிக்கப்படுகின்றது. மேலும் மேற்படி இலவச அரிசி பெறாதவர்களின் குடும்ப அட்டைகள் ரத்து செய்யப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும் முக்கிய அறிவிப்பு : அரிசி விநியோகம் நடைபெறும் மையங்களுக்கு வரும் பயனாளிகள் கண்டிப்பாக முகக் கவசம் அணிந்து வருவதோடு சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்குமாறு வேண்டிக் கொள்கிறோம். “
எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.