சென்னை: முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் வரும் 5ந்தேதி தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழக சட்டப்பேரவை விரைவில் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவடைந்து உள்ள நிலையில், அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுப்பது மற்றும் உக்ரைன் போர் பதற்றம், பெண்களுக்கான நிதி உதவி, தங்க நகை கடன் தள்ளுபடி உள்பட பல்வேறு நிகழ்வுகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளதுடன், சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ள 2022-23ம் ஆண்டுக்கான நிதி நிலை, வேளாண் பட்ஜெட் தொடர்பாகவும் விவாதிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
5ந்தேதி மாலை 6 மணிக்கு அமைச்சரவை கூட்டம் தலைமைச்செயலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel