மும்பை

ங்குச் சந்தை பரிவர்த்தனை வாரியத்தின் (செபி) முதல் பெண்  தலைவராக மாதபி பூரி புச் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு பங்குச் சந்தை பரிவர்த்தனை வாரியத்தின் தலைவராக ஆஜய் தியாகி செபி தலைவராக மூன்று ஆண்டுகளுக்கு நியமிக்கப்பட்டார்  இவர் 1984 ஆம் ஆண்டு ஐ ஏ எஸ் பிரிவைச் சேர்ந்த்வர் ஆவார்.

 இவரது பதவிக்காலம் 2020 ஆம் ஆண்டு முடிவடைந்த பிறகும் கொரோனா பரவல் காரணமாக பணிக்காலம் 6 மாதம் நீட்டிக்கப்பட்டது.    பிறகு ஆகஸ்ட் 2020 ஆம் வருடம் மேலும்  18 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டது.  இன்றுடன் அஜய் தியாகியின் பதவிக் காலம் முடிவடைந்துள்ளது.

இதையொட்டி ஐசிஐசிஐ செக்யூரிட்டி முன்னாள் தலைவராக உள்ள மாதபி பூரி புச் செபி தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.  இவர் கடந்த ஆண்டு வரை செபியின் முழு நேர உறுப்பினராக இருந்தவர் ஆவார்.  தவிர இவர் ஷாகாய் டெவலப்மெண்ட் வங்கியின் ஆலோசகராகவும்  பணி புரிந்துள்ளார்.

மாதபி பூரி புச் அடுத்த 3 ஆண்டுகளுக்கு செபியின் தலைவராக பணியாற்றுவார்.  இந்த பதவிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள முதல் பெண் என்னும் பெருமையை மாதபி பூரி புச் பெறுகிறார்.