பெலாரஸ்: உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் 5வது நாளாக தீவிரமடைந்துள்ள நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே பேச்சு வார்த்தை நடத்த உக்ரைன் குழு பெலாரஸ் சென்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அங்கு இரு நாடுகளுக்கும் இடையே இன்று பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.
நேட்டோ நாடுகள் அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ரஷ்ய அதிபர் புடின் உத்தரவிட்டதை தொடர்ந்து பிப்ரவரி 24ந்தேதி முதல் உக்ரைன் மீது ரஷிய படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். தலைநகர் கிவ்-ஐ கைப்பற்ற ரஷிய படைகள் முன்னேறி வரும் நிலையில், அதை தடுத்து நிறுத்தும் முயற்சியிலலும் உக்ரைன் படைகள் தீவரிமாக போரிட்டு வருகின்றன. ரஷிய படைகளுக்கு உக்ரைன் வீரர்களும் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில், இரு நாடுகளும் போரை கைவிட்டு பேச்சுவார்த்தை நடத்தும்படி, இந்தியா உள்பட உலக நாடுகள் அறிவுறுத்தி வந்தன. இதையடுத்து இரு நாடுகளுக்கும் பேச்சுவார்த்தைக்கு தயார் என்று அறிவித்துள்ளன. அதன் தொடர் நடவடிக்கையாக, அண்டை நாடான பெலாரஸ்-இல் சில நிபந்தனைகளுடன் பேச்சுவார்த்தை நடத்த நடைபெற உள்ளது.
உக்ரைன் ரஷ்யா இடையே இன்று பெலாரஸ்-இல் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாகவும், இதற்கான ஏற்பாடுகளை பெலாரஸ் அரசு மேற்கொண்டதாகவும் கூறப்பட்டது. இதையடுத்து, பேச்சுவார்த்தைக்கு ரஷிய குழுவினர், அங்கு தயாராக இருப்பதாக கூறப்பட்டது. இதையடுத்து, ரஷ்யாவுடன் பேச்சு வாத்தை நடத்துவதற்காக உக்ரைன் குழு பெலாரஸ் நாட்டிற்கு சென்றடைந்துள்ளது.
உலக அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள உக்ரைன் -ரஷ்யா இடையேயான போர் இந்த பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்கு வருமா? என்ற எதிர்பார்ப்பு உலக நாடுகள் மத்தியிலும் எழுந்துள்ளது.