கும்பகோணம்:” ஊழல் தவறில்லை என்பதை மீண்டும் மீண்டும் வாக்காளர்களை திருத்தவும் முடியாது மாற்றவும் முடியாது என கும்பகோணம் மாநகராட்சி தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்த வேட்பாளர் சுயேச்சை வேட்பாளர் விரக்தியுடன் போஸ்டர் ஒட்டி, விடைபெறுவதாக அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 19ந்தேதி நடைபெற்ற 22ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் 90 சதவிகித வெற்றியை ஆளும் திமுக கூட்டணியே பெற்றுள்ளது. இந்த தேர்தலில் ஏராளமான மக்கள் நல ஆர்வலர்களும் சுயேச்சையாக போட்டியிட்ட நிலையில், அவர்கள் தோல்வியை சந்தித்துள்ளனர். இதனால் அவர்கள் தங்கள் மனக்குமுறை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், கும்பகோணம் மாநகராட்சி தேர்தலில் சுயேச்சையாக களமிறங்கயி ஆர்.வினோத் என்ற வேட்பாளர் தோல்வி அடைந்துள்ளதால், தனக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து போஸ்டர் ஒட்டியுள்ளார்.
அவரது போஸ்டரில், மக்களின் வரிப்பணத்த அரசியல்வாதிகள்ஊழல் செய்தில் எள் அளவும் தவறு இல்லை என்பதை ஒவ்வொரு தேர்தலிலும் நிரூபிக்கும் ஊழலின் பிறப்பிடமான வாக்காள பெருங்குடி மக்களே! உங்களை திருத்தவும் முடியாது, மாற்றவும் முடியாது! திருந்த வேண்டியதும், மாற வேண்டியதும் நான்தான்.. என்னை நம்பி மாற்றத்தை விரும்பி எனக்கு வாக்களித்தவர்களுக்கு நன்றிகள்கோடி… சுயேச்சையாக விடைபெறுகிறேன் என்று விரக்தியாக தெரிவித்துள்ளது.
அதுபோல பரமக்குடி நகராட்சி தேர்தலில் திமுக வேட்பாளர் தோல்வி அடைந்த நிலையில், தனது தோல்விக்கு திமுகவினரின் உள்ளடி வேலைகளே காரணம் என்று விரக்தி அடைந்து போஸ்டர் அடித்து நென்றி தெரிவித்துள்ளார்.
இதுபோன்ற வித்தியாசமான போஸ்டர்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.