சென்னை: பெரியார் வேடமிட்டு நடித்த குழந்தை குறித்து வன்முறை பதிவு போட்ட கோவில்பட்டியைச் சேர்ந்த முகநூல் நபர் தமிழ்நாடு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பெரியார் வேடமிட்ட நாடகம் ஒன்று ஒளிபரப்பானது. இது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பான விமர்சனங் கள் எழுந்த நிலையில், அனகாபுத்தூரை சேர்ந்த மாணவர் இளந்தமிழன் மற்றும் அவரது பெற்றோரை முதல்வர் மு.க.ஸ்டாலில் நேரில் அழைத்து பாராட்டினார். இதனால், அந்த விவகாரம் மேலும் பரபரப்பு அடைட்நதது.
சிறுவனுக்கு எதிராக முகநூல் பக்கத்தில் கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் வன்முறை பதிவு ஒன்று வெளியானது. அதில், “பெரியார் வேடம் போட்ட குழந்தையை அடித்துக் கொன்று நாலு முக்கு ரோட்டில் தூக்கில் தொடங்கவிட வேண்டும். அப்போதுதான் மத்த குழந்தைகளுக்கும் அதன் பெற்றோருக்கும் பயம் வரும்” என மிரட்டப்பட்டிருந்தது.
இதுகுறித்து காவல்துறையில் புகார் கூறப்பட்டது. இதையடுத்து, வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், அந்த வன்முறை பதிவை போட்ட நபர், தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியை சேர்ந்த வெங்கடேஷ் குமார் பாபு (36) என்பதை கண்டுபிடித்தனர். அவரை 3 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.