உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததைத் தொடர்ந்து அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ரஷ்யா மீது பல்வேறு பொருளாதார மற்றும் வர்த்தக தடைகளை விதித்து வருகிறது.

ரஷ்யாவின் ஏரோபிளோட் விமான நிறுவனம் விமானங்கள் பிரிட்டன் வருவதற்கும் அதன் வான்வழியை பயன்படுத்தவும் தடை விதித்திருக்கிறது.

மேலும், பல்வேறு வங்கிகள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் ரஷ்ய அரசை வழிநடத்தும் பெருமுதலாளிகள் தொடர்புடைய நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு தடை விதித்துள்ளது பிரிட்டன்.

இதனைத் தொடர்ந்து பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானங்கள் எதுவும் ரஷ்யாவுக்குள் வரவோ ரஷ்ய வான்வழியை பயன்படுத்த கூடாது என்று ரஷ்யா இன்று அறிவித்துள்ளது.

இதனால் தொலைதூரம் செல்லும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானங்கள் ரஷ்யாவில் எரிபொருள் நிரப்பவோ வேறு காரணங்களுக்காகவோ தரையிறங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது பிரிட்டனுக்கு ரஷ்யா கொடுத்த பதிலடியாக கருதப்படுகிறது.

கெய்னின் பாவத்தை நினைவுபடுத்துகிறது… சகோதர யுத்தத்தை உடனே நிறுத்துங்கள் புடினுக்கு உக்ரைன் ஆர்த்தடாக்ஸ் சர்ச் கோரிக்கை