உக்ரைன்
உக்ரைன் நாட்டில் போர் வெடித்துள்ளதால் அங்குள்ள இந்தியர்கள் சுரங்க மெட்ரோ ரயில் நிலையங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
ரஷ்யா இன்று முதல் உக்ரைன் நாட்டில் போர் தொடங்கி உள்ளது. அங்குள்ள விமான நிலையங்கள் அழிக்கப்பட்டுள்ளன. இதனால் அங்குள்ள இந்தியர்களால் நாடு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
விமான நிலையங்கள் இல்லாததால் இந்தியர்களை அழைத்து வரச் சென்ற விமானம் திரும்பி வந்துள்ளது. தற்போது ரஷ்யப் போர் விமானங்கள் தொடர்ந்து குண்டுகள் வீசி வருகின்றன. எனவே இந்தியர்கள் உள்ளிட்ட பலரும் மிகவும் கலக்கம் அடைந்துள்ளனர்.
இந்நிலையில் இந்தியத் தூதரகம் அங்குள்ள இந்தியர்களைச் சுரங்க மெட்ரோ ரயில் நிலையங்களுக்குள் செல்ல அறிவுறுத்தி உள்ளது. அவை பதுங்கு குழி போல் பாதுகாப்பாக இருக்கும் என விளக்கம் அளித்துள்ளது. இதையொட்டி இந்தியர்கள் சுரங்க மெட்ரோ ரயில் நிலையங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.