சென்னை: நடைபெற்று முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. பெரும்பாலான இடங்களில் திமுக கூட்டணி முன்னணியில் உள்ள நிலையில், மாநிலம் முழுவதும் உள்ள 21 மாநகராட்சிகளின் வாக்கு எண்ணிக்கை தொடர்பான காலை 10 மணி  நிலவரம் வெளியாகி உள்ளது.

தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கு நேற்று முன்தினம்(பிப்ரவரி 19) அன்று தேர்தல் நடத்தப்பட்டது.இந்த தேர்தலில் சராசரியாக 60.70 சதவீத வாக்குகள் பதிவாகின.அதிக பட்சமாக தர்மபுரி மாவட்டத்தில் 80.49 சதவீதமும், குறைந்தப்பட்சமாக சென்னையில் 43.59 சதவீதம் வாக்குகளும் பதிவானது.  இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

சென்னை மாநகராட்சி (200 வார்டுகள்)

சென்னையில் மொத்தம் 32 வார்டுகளில் திமுக கூட்டணி முன்னிலை வகிக்கிறது.

மதுரை மாநகராட்சி (100 வார்டுகள்)

16 இடங்களில் திமுக கூட்டணியும், 2 இடங்களில் அதிமுக கூட்டணியும் முன்னிலை வகிக்கின்றன.

கோவை மாநகராட்சி (100 வார்டுகள்)

11 வார்டுகளில் திமுக கூட்டணி முன்னிலையில் உள்ளது.

திருச்சி மாநகராட்சி (65 வார்டுகள்)

12 வார்டுகளில் திமுக கூட்டணியும் 1 வார்டில் அதிமுகவும் முன்னிலை வகிக்கிறது.

சேலம் மாநகராட்சி (60 வார்டுகள்)

10 வார்டுகளில் திமுக கூட்டணி முன்னிலை வகிக்கிறது.

திருநெல்வேலி மாநகராட்சி (55 வார்டுகள்)

5 வார்டுகளில் திமுக கூட்டணியும் 1 வார்டில் அதிமுகவும் முன்னிலை வகிக்கிறது.

திருப்பூர் மாநகராட்சி (60 வார்டுகள்)

2 வார்டுகளில் திமுக கூட்டணி முன்னிலை வகிக்கிறது.

வேலூர் மாநகராட்சி (60 வார்டுகள்)

2 உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

ஈரோடு மாநகராட்சி (60 வார்டுகள்)

ஈரோடு மாநகராட்சியில் போட்டியின்றி ஒரு வேட்பாளர் வார்டு உறுப்பினராகத் தேர்வு செயய்ப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி மாநகராட்சி (60 வார்டுகள்)

4 வார்டுகளில் திமுக கூட்டணி முன்னிலை வகிக்கிறது.

தஞ்சாவூர் மாநகராட்சி (51 வார்டுகள்)

15 வார்டுகளில் திமுக கூட்டணி முன்னிலை வகிக்கிறது.

திண்டுக்கல் மாநகராட்சி (48 வார்டுகள்)

ஒசூர் மாநகராட்சி (45 வார்டுகள்)

நாகர்கோவில் மாநகராட்சி (52 வார்டுகள்)

ஆவடி மாநகராட்சி (48 வார்டுகள்)

காஞ்சிபுரம் மாநகராட்சி (51 வார்டுகள்)

கரூர் மாநகராட்சி (48 வார்டுகள்)

போட்டியின்றி ஒரு வேட்பாளர் வார்டு உறுப்பினராகத் தேர்வு செயய்ப்பட்டுள்ளார்.

கடலூர் மாநகராட்சி (45 வார்டுகள்)

சிவகாசி மாநகராட்சி (48 வார்டுகள்)

தாம்பரம் மாநகராட்சி (70 வார்டுகள்)

கும்பகோணம் மாநகராட்சி (48 வார்டுகள்)