சென்னை: தமிழ்நாடு அரசின் தாராளத்தால், ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதிகளில் ஒருவரான பேரறிவாளனின் பரோல் 8வது முறையாக மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது. கொலை வழக்கு கைதி ஒருவருக்கு தொடர்ந்து 8 மாதம் பரோல் வழங்கப்பட்டு இருந்து இந்திய வரலாற்றில் இதுதான் முதல்முறை என்று கூறப்படுகிறது.
ராஜீவ்கொலை வழக்கு கைதிகளில் ஒருவரான பேரறிவாள உடல்நலம் பாதிப்பு இருப்பதாகவும், அதற்காக சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறி பரோல் பெற்றார். இவருக்கு ஸ்டாலின் தலைமையிலான தமிழகஅரசு முதன்முறையாக கடந்த 2021ம் ஆண்டு மே 28 ஆம் தேதி 30 நாட்கள் பரோல் வழங்கியது. அதுமுதல் தொடர்ந்து அவருக்கு பரோல் நீட்டிக்கப்பட்டு வருகிறது. கடந்த மாதம் நீட்டிக்கப்பட்ட பரோல், 28ந்தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், 8-வது முறையாக மேலும் ஒரு மாதம் நீட்டித்து தமிழக சிறைத்துறை உத்தரவிட்டுள்ளது.