சென்னை:
குடியரசு தினவிழா அணிவகுப்பில் பங்கேற்ற அலங்கார ஊர்திகள் மெரினா கடற்கரையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன; இன்று முதல் 23ம் தேதி வரை மக்கள் பார்வையிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்றுவிட்டு இன்று சென்னை திரும்பும் தமிழக அரசின் குடியரசு தின அலங்கார ஊர்திகள் பிப்.20-ம் தேதி முதல் பிப்.23-ம் தேதி வரை பொதுமக்கள் பார்வைக்காக மெரினா கடற்கரையில் காட்சிப்படுத்தப்படும் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் ஜெ. விஜயா ராணி தெரிவித்துள்ளார்.