குழந்தை வரம் அருளும் அற்புதக் கோவில்
திருவண்ணாமலையில் இருந்து வேலூர் சாலையில் உள்ள கோட்டை மலை வேணுகோபால சுவாமி இக்கோவிலுக்குச் சென்று வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
திருமணத்துக்குப் பின்பு அனைவரது வீட்டிலும் ஆசைப்படுவது குழந்தைகளைத்தான். குழந்தை பாக்கியத்தைத் தடுத்து நிற்கும் தோஷங்களில் இருந்து விடுபட என்ன செய்யுறதுன்னு கவலைப்படுபவர்கள் இந்த கோட்டை மலை வேணுகோபால சுவாமி கோவிலுக்கு குடும்பத்துடன் போய் வழிபட்டால் மாதங்களிலேயே வீட்டில் ‘குவா… குவா…’ சத்தம் கேட்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.
திருவண்ணாமலையில் இருந்து வேலூர் சாலையில் சில கிலோ மீட்டர் தொலைவில் அடர்ந்த வனப்பகுதிகளின் நடுவே மலைமேல் அமைந்துள்ளது கோட்டை மலை வேணுகோபால சுவாமி கோவில். இக்கோவிலுக்குச் சென்று வழிபட்டு வருவதன் மூலம் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. அதுபோலவே பல தம்பதியர்களுக்குக் குழந்தை பாக்கியம் கிடைத்துள்ளதாகக் கூறுகின்றனர் சுற்றுவட்டார மக்கள்.
சம்புவராய மன்னர் தன் மனைவிக்குக் குழந்தை பாக்கியம் வேண்டிக் கட்டியதே கோட்டை மலை ஸ்ரீ ருக்மணி, சத்யபாமா வேணுகோபால சுவாமி கோவில். இக்கோவிலின் சிறப்பாக, காலை நேரக் கதிரவனின் ஒளி பெருமாளின் திருமுகத்தில் படும் காட்சி காண்போரைப் பரவச நிலையடையச் செய்யும். ஆதிசங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட பாணலிங்கமும், ஜனாகர்ஷண சக்கரமும் இக்கோவில் தளத்தில் அமைத்துள்ளது.
சென்னையில் இருந்து ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், இராணிப்பேட்டை வழியாக சுமார் 162 கிலோ மீட்டர் பயணித்தால் வேணுகோபால சுவாமி கோவிலை அடையலாம். திருச்சி விரைவுவண்டி, எல்டிடி காரைக்கால் விரைவுவண்டி, திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ், மதுரை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட இரயில்களும் திருவண்ணாமலைக்குச் சென்னையில் இருந்து இயக்கப்படுகின்றன.