சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி மக்களோடு மக்களாக வரிசையில் வந்து குடும்பத்தோடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். வாக்களித்தார் .

தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகள் உள்ளிட்ட 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.  தமிழகம் முழுவதும் 30,785 வாக்குச்சாவடிகளில் 2.83 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர்.

இந்த நிலையில்,   சென்னை தேனாம்பேட்டை எஸ்ஐஇடி கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது மனைவி மற்றும் குடும்பத்தினருடன் மக்களோடு  மக்களாக வரிசையில் நின்று தனது வாக்கினை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது, பொதுமக்களுக்கு அரசு நிறைவேற்ற வேண்டிய பணிகளை உள்ளாட்சி அமைப்புகளின் மூலம்தான் செய்ய முடியும்; நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வாக்குரிமை உள்ள அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

கோவையில்  ராணுவம் வரக்கூடிய அளவிற்கு எந்த சம்பவமும் நடைபெறவில்லை. தோல்வி பயம் காரணமாகவே கோவையில் அதிமுகவினர் போராட்டம் ஆதாரத்துடன் தவறுகளை சுட்டிக்காட்டினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.