சென்னை:
கர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில் துணை இராணுவத்தை பாதுகாப்பு அளிக்க வேண்டும் என அதிமுகவினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி இதுகுறித்து கோரிக்கை விடுத்து கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் முன் போராட்டம் நடத்தியதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு அவர்கள் உள்ளாட்சி தேர்தலுக்கு போதுமான போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு என்றும் துணை ராணுவ படையினர் தேவையில்லை என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளார்.