சென்னை

ச்சமின்றி பொதுமக்கள் வாக்களிக்க ஒரு லட்சம் காவல்துறையினர் பாதுகாப்பில் ஈடுபடுவதாக மாநில தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார்.

தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நாளை நடைபெற உள்ளது.  இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.   இது குறித்து இன்று மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் செய்தியாளர்களைச் சந்தித்தார்.  அவரிடம் செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார்.

பழனி குமார் தனது பதிலில்,

“நாளை நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 30.735 வக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.  மக்கள் அச்சமின்றி வாக்களிக்க சுமார் ஒரு லட்சம் காவல்துறையினர் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கோவையில் சிறப்பு தேர்தல் அதிகாரியாக நாகராஜன் ஐ ஏ எஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.  ஏற்கனவே கோவையில் தங்கி இருந்த வெளியூரைச் சேர்ந்தவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.,

அனைத்து வாக்குச் சாவடிகள் மற்றும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள அறைகளுக்கு உள்ளே மற்றும் வெளியே சிசிடிவி காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.  வாக்கு எண்ண 238 மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு அங்கும் சிசிடிவி காமிரா கண்காணிப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது/

தமிழகத்தில் 5,960 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டு அங்கு வெப் ஸ்டிரீம் மூலம் கண்காணிப்பு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.  தமிழகம் முழுவதும் 41 ஐ ஏ எஸ் அதிகாரிகள் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.  இவர்களில் மூவர் சென்னையில் பணி புரிகின்றனர்.

எனவே மக்கள் அச்சமின்றி நாளை தங்கள் வாக்குகளைத் தவறாமல் செலுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்”

என வேண்டுகோள் விடுத்துள்ளார்.