சென்னை: பாஜகவினரின் நடவடிக்கைகள் குறித்து ஒரு வருடத்திற்கு முன்பே கணித்த ஐஏஎஸ் அதிகாரி தனியார் யுடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பிரத்யேக பேட்டி தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.
தமிழ்நாட்டில் தற்போது நடைபெற்று வரும் பல நிகழ்வுகள், பாஜகவினரின் நடவடிக்கைள் குறித்து, ஒரு வருடத்திற்கு முன்பே மிக துல்லியமாக கணித்துள்ளார். அவரது வீடியோ…
வீடியோ உதவி: நன்றி – கலாட்டா டாட் காம்
கர்நாடகாவில் ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றி வந்த சசிகாந்த் செந்தில் கடந்த 2019ம் ஆண்டு தனது பதவியை ராஜினாமா செய்தார். அதற்கு அப்போது அவர் கூறிய காரணம், இந்திய ஜனநாயகத்தின் அடிப்படை கட்டமைப்பையே பாஜக அரசு சேதப்படுத்துவதாகவும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தனது ஐஏஎஸ் அதிகாரி பதவியை ராஜினாமா செய்வதாகவும் சசிகாந்த் செந்தில் கூறியிருந்தார். அதையடுத்து கடந்த ஆண்டு (2021) தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் இணைந்தார். அவருக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சமூக ஊடங்களை ஒருங்கிணைக்கும் பொறுப்பு மற்றும் காங்கிரசின் முக்கிய பிரிவுகளை ஒருங்கிணைக்கும் பொறுப்பும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.