சென்னை

டிகர் சிம்புவுக்கு எதிரான ஆபாச பாடல் வழக்கைச் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

பெண்களை ஆபாசமாக விமர்சிக்கும் வகையில் கடந்த 2015 ஆம் ஆண்டு ஒரு பாடல் பீப் பாடல் என்னும் பெயரில் வெளியானது.  இந்த பாடலை அனிருத் இசையில் நடிகர் சிம்பு பாடி இருந்தார்.  இந்த பாடலுக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது.  மகளிர் அமைப்புக்கள் இதை எதிர்த்துப் போராடி புகார் அளித்தனர்.

இந்த புகார்களின் அடிப்படையில் சிம்பு மீது வழக்குப் பதியப்பட்டது.  இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி நடிகர் சிம்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார்.   நேற்று இந்த மனு நீதிபதி சந்திரசேகரன் முன்பு விசாரணைக்கு வந்தது.   அப்போது கோவை நீதிபதியின் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அந்த அறிக்கையில் நடிகர் சிம்புவுக்கு எதிரான புகாருக்கு ஆதாரம் இல்லை என குறிப்பிட்டு இருந்தது.  இதை ஏற்ற நீதிபதி சந்திரசேகரன் சிம்புவுக்கு எதிரான ஆபாச பாடல் வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.   சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் பதிவு செய்த வழக்கு குறித்து பதில் அளிக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.