சென்னை

சிபிஐ தஞ்சை மாணவி தற்கொலை குறித்து குழந்தைகளைத் தற்கொலைக்குத் தூண்டியதாகா வழக்குப்  பதிந்துள்ளது,

தமிழகத்தில் அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியம் வடுகபாளையத்தை சேர்ந்த முருகானந்தம் என்பவரது முதல் மனைவி இறந்துவிட்ட நிலையில், முதல் மனைவிக்குப் பிறந்த மகளைத் தஞ்சை மாவட்டம் பூதலூர் ஒன்றியம் மைகேல்பட்டியில் உள்ள தனியார்ப் பள்ளியொன்றில் சில ஆண்டுகளுக்கு முன்னர் 8-ஆம் வகுப்பில் சேர்த்துள்ளார்

அந்த மாணவி பள்ளியின் அருகில் உள்ள செயின்ட் மைக்கேல் மகளிர் விடுதியில் தங்கி படித்துள்ளார்.  அவர் இந்த வருடம் 12ஆம் வகுப்பு படித்து வந்திருக்கிறார். திடீரென இந்த மாணவி கடந்த மாதம் தற்கொலை செய்து இறந்தார்.   அவரை மதமாற்றம் செய்ய தூண்டியதால் அவர் தற்கொலை செய்து கொண்டதாகப் புகார் எழுந்தது.

நேற்று (பிப்ரவரி 14) இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டிருந்தது   இவ்வழக்கை விசாரித்து வரும் சிபிஐ, மாணவியின் தற்கொலையை குழந்தைகளைத் தற்கொலை செய்யத் தூண்டுதல்,  குற்றம் செய்ய முயற்சித்தல், சிறார் நீதி சட்டப்பிரிவுகளான 75, 82(1) ஆகிய பிரிவுகளின் கீழ் தற்போது வழக்குகளாகப் பதிவு செய்துள்ளன.

உயிரிழந்த மாணவி தங்கியிருந்த பெண்கள் விடுதியின் வார்டன் சகாயமேரி மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.