சென்னை:
ன்னட திரையுலகின் முன்னணி நடிகர் சிவராஜ்குமார் தனது மனைவியுடன் இன்று தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசியுள்ளார்.

அடுத்த மாதம் மார்ச் 17ம் தேதி நடிகர் சிவராஜ்குமாரின் தம்பியும் மறைந்த நடிகருமான புனீத் ராஜ்குமார் கடைசியாக நடித்த ஜேம்ஸ் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், எந்த விஷயத்திற்காக இந்த சந்திப்பு நடைபெற்றது என்கிற கேள்வி கோலிவுட்டில் எழுந்துள்ளது.

முன்னதாக புனீத் ராஜ்குமாரின் நினைவிடத்திற்கு உதயநிதி ஸ்டாலின் சென்று மரியாதை செலுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதுவரை கன்னட நடிகர் புனீத் ராஜ்குமாரின் எந்தவொரு திரைப்படமும் தமிழில் வெளியானது இல்லை. இந்நிலையில், முதன்முறையாக தமிழில் டப் செய்யப்பட்டு ஜேம்ஸ் திரைப்படம் வரும் மார்ச் 17ம் தேதி புனீத் ராஜ்குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகிறது. சமீபத்தில் வெளியான அதன் டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், இன்று (பிப்., 13) தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினை கன்னட திரையுலகின் முன்னணி நடிகர் சிவராஜ்குமார் தனது மனைவி கீதா சிவராஜ்குமார் உடன் இணைந்து வந்து சந்தித்து பேசிய புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. புனீத் ராஜ்குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற உள்ள நினைவு விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தார்களா? அல்லது ஜேம்ஸ் பட ரிலீஸ் விவகாரம் குறித்து சந்தித்தார்களா? என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.