டில்லி

னி அனைத்து கார்களிலும் 3 பாயிண்ட் சீட் பெல்டுகள் கட்டாயம் பொருத்த வேண்டும் என கார் உற்பத்தியாளர்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

கார்களில் தற்போது ஓட்டுநர், ஓட்டுநர் அருகே அமர்பவர், பின் இருக்கையில் இருவர்  ஆகியோர் மட்டுமே 3 பாயிண்ட் சீட் பெல்ட் அணிய முடிகிறது.  அதே வேளையில் பின் இருக்கையில் நடுவில் அமர்வோருக்கு 3 பாயிண்ட் சீட் பெல்ட் இருப்பதில்லை.  ஒரு சில வாகனங்களில் விமானங்களைப் போல் இடுப்புக்கு மட்டும் பெல்ட் உள்ளது.

இவ்வாறான நிலையால் விபத்து நேரிடும் போது  நடுவில் அமர்ந்திருப்பவருக்குப் பாதுகாப்பு குறைகிறது.  இது குறித்துப் பல பயணிகள் புகார் அளித்தனர்.   அதையொட்டி மத்திய அரசு இனி தயாரிக்கப்படும் வாகனங்களில் அனைத்து  இருக்கைகளிலும் 3 பாயிண்ட் சீட் பெல்டுகள் பொருத்த வேண்டும் என மத்திய அரசு உத்தரவு இட்டுள்ளது.

மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின்கட்கரி,

“ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் சாலை விபத்துகளில் 1.5 லட்சம் பேர் மரணம் அடைகின்றனர். சாதாரணமாக விபத்து ஏற்படும் போது, 2 பாயின்ட் சீட் பெல்ட் அணிந்தவர்களுக்கு அதிகமான காயமும், உயிரிழப்பும் ஏற்படுகிறது. எனவே இதைத் தவிர்க்க கார்களில் 3 பாயின்ட் சீட் பெல்ட்டுகள் கட்டாயமாக்கப்படுகிறது. இனி கார் தயாரிப்பாளர்கள்  அனைத்து இருக்கைகளிலும் 3 பாயின்ட் சீட் பெல்ட் பொருத்த வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது,’’

எனத் தெரிவித்துள்ளார்.