பாலக்காடு: கேரளாவில் பாறை இடுக்கில் 2 நாட்களாக சிக்கிய உணவு தண்ணீர் இன்றி தவித்த இளைஞரை ராணுவத்தினர் பத்திரமாக மீட்டனர். ராணுவத்தின் மகிழ்ச்சிக்கு கேரள மாநில மக்கள் மகிழ்ச்சியையும், வணக்கத்தையும் தெரிவித்துள்ளனர்.

கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த 3 இளைஞர்கள், இடுக்கி மாவட்டம் மலப்புழை காட்டுப்பகுதிக்கு சுற்றுலா சென்றுள்ளனர். அங்குள்ள மலையில் ஏற முயற்சி மேற்கொண்டர். இதில், பாபு என்ற மாணவர் வழுக்கி விழுந்து செங்குத்தான மலை இடுக்கில் சிக்கிக் கொண்டார். அவரை மீட்க நண்பர்கள் இருவரும் முயற்சி மேற்கொண்டனர். ஆனால், முடியவில்லை.

இதையடுத்து, உடனடியாக கீறே இறங்கிய அவர்கள் வனத்துறையினரிடம் தகவல் கொடுத்தனர். அதையடுத்து, கேரள மலைஏற்ற வீரர்களும், பேரிடர் மீட்பு படையினரும் விரைந்து சென்று, மலை இடுக்கில் விழுந்த இளைஞரை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், அவர் எங்கே இருக்கிறார் என்பதை காண முடியவில்லை. இனால், பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அவரை மீட்க ராணுவத்தினர் உதவி கோரப்பட்டது.

இதைத்தொடர்ந்து அங்கு விரைந்து வந்த ராவத்தினர் ஹெலிகாப்டர் மூலம் தேடும்பணியை தொடங்கினர். சுமார் 43 நேர  மணி தேடுதலுக்கு பிறகு, மலை இடுக்குகளில் சிக்கிய வாலிபர் பாபு சிக்கிய இடம்  கண்டுபிடிக்கப்பட்டது. அதையடுத்து அவரை மீட்கும் பணி நேற்று இரவு நடைபெற்றது. ஒருவழியாக இன்று காலையில் அந்த இளைஞர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார். கடந்த இரண்டு நாட்களாக உணவு, தண்ணீர் இன்றி தவித்த அந்த வாலிபர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.