இடாநகர்: அருணாச்சல பிரதேசத்தில் ரோந்து பணியின்போது, பனிச்சரிவில் சிக்கி 7 ராணுவ வீர்ரகள் உயிரிழந்துள்ளது இருப்பதாக என்று இந்திய ராணுவம் தகவல் வெளியிட்டுள்ளது. இதற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
அருணாச்சல பிரதேசத்தில் தவாங் மாவட்டத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி காணாமல் போயிருந்த ரோந்து குழுவைச் சேர்ந்த ஏழு ராணுவ வீரர்களும் உயரிழந்துள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
அருணாச்சல பிரதேசத எல்லையோர பகுதியான தவாக் மாவட்டத்தில், கமெங் பகுதியில் கடந்த 6ந்தேதி பனிச்சரிவு ஏற்பட்டது. இந்த பனிச்சரிவில் அந்த பகுதியில் ரோந்து பணிகளில் ஈடுபட்டு வந்த 7 ராணுவ வீரர்கள் கொண்ட குழு சிக்கியது. அவர்கள் தொடர்பு துண்டிக்கப்பட்டதுடன், அவர்களை தேடும் பணி நடைபெற்றது. ராணுவத்தை சேர்ந்த ஒரு டீம் ஹெலிகாப்டர் மூலமாகவும் தேடும் பணியில் ஈடுபட்டார்கள். இந்த நிலையில், அவர்கள்மீது பணிக்கட்சிகள் விழுந்து மூடியதால், 7பேரும் உயிரிழந்துள்ளனர். அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இரங்கல் தெரிவித்து டிவிட் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, “அருணாச்சல பிரதேசத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்தது வருத்தமளிக்கிறது. நமது தேசத்திற்கு அவர்களின் முன்மாதிரியான சேவையை நாம் ஒருபோதும் மறக்க மாட்டோம். அவர்களை இழந்து வாடும் குடும்பங்களுக்கு இரங்கல்கள்” என்று கூறியுள்ளார்.