டில்லி

டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக துணை வேந்தர் நியமனத்தை பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் வருண் காந்தி எதிர்த்து விமர்சித்துள்ளார்.

மறைந்த பிரதமர் இந்திரா காந்தியின் பேரனான வருண் காந்தி பாஜக மக்களவை உறுப்பினராக உள்ளார்.   அவர் பாஜகவின் இருந்த போதும் அக்கட்சியில் தவறுகள் நிகழும் போது எதிர்த்து குரல் எழுப்பி வருகிறார்   இது ஒரு சில பாஜக தலைவர்களுக்குப் பிடிக்காமல் உள்ளது.

சமீபத்தில் டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக துணை வேந்தராக சாந்திஸ்ரீ துல்லிபுடி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.  இதற்காக அவர் பிரதமர் மோடியைப் புகழ்ந்து ஒரு நன்றி அறிக்கையை வெளியிட்டுள்ளார்.  இது குறித்து வருண் காந்தி தனது டிவிட்டரில் கடுமையாக விமர்சித்துள்ளார்.

வருண் காந்தி,

“துணை வேந்தரின் அறிக்கை ஒரு படிப்பறிவு இல்லாதவர் எழுதியதை போல் ஏராளமான இலக்கணப்பிழைகள் உள்ளன.  இத்தக்மைய மலிவான நியமனங்கள் இளைண்ஜர்கள் எதிர்காலத்தைக் கடுமையாக ப்பாதிக்கும்.   டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்துக்குச் சிறந்த திறன்மிக்க வழி நடத்தல் தேவை”

என டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.