சென்னை: நடைபெற உள்ள அந்தமான் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது அதிமுக தலைமை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டைப்போல அந்தமானிலும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. அங்கு மாநில நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் மார்ச் 6ந்தேதி நடைபெற இருக்கிறது. இதையொட்டி, அங்கு போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை அதிமுக தலைமை வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக அதிமுக வெளியிட்டுள்ள அறிவிப்பில், அந்தமான் மாநிலத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் மார்ச் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது.
உள்ளாட்சி தேர்தலையொட்டி நகராட்சி மன்ற வார்டு உறுப்பினர், பேரூராட்சி மன்ற வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு அதிமுகவின் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. அந்தமான் மாநிலத்தை சேர்ந்த கழக நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும் தற்போது அறிவிக்கப்ட்டுள்ள வேட்பாளர்கள் வெற்றி பெற்றிடும் வகையில் சிறந்த முறையில் தேர்தல் பணிகளை ஆற்றிட வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.