சென்னை: தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து அரசுத்துறை மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார்.
தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் பணிகள் சூடுபிடித்துள்ளன. அரசியல் கட்சியனரும் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அதே வேளையில், தேர்தல் பணிகள் மற்றும் வாக்காளர்களுக்கு இலவசங்கள் வழங்குவதை தடுக்க தேர்தல் அலுவலர்களும் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில், நகர்புற உள்ளாட்சி தேர்தலில் வழங்கப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும், சட்டம் ஒழுங்கு குறித்தும் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இந்த கூட்டத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு, தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு, உள்துறை செயலாளர் உள்ளிட்ட அரசு உயர் அலுவலர்கள் பங்கேற்றுள்ளனர்.