புதுச்சேரி

டிகர் விஜய் மற்றும் புதுச்சேரி முதல்வர் சந்திப்பு குறித்து பதில் அளிக்க முடியாது என அமைச்சர் நமச்சிவாயம் கூறி உள்ளார்.

சென்னையில்  நடிகர் விஜய்யை அவரது இல்லத்துக்குச் சென்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி சந்தித்து பேசினார்.   அப்போது முதல்வர் இதை வழக்கமான சந்திப்பு எனக் கூறிய போதிலும் பல வித யூகங்கள் எழுந்துள்ளன. ரங்கசாமி தனது தேர்தல் வெற்றிக்கு  பிறகு பிரதமர் மோடி, அதிமுக தலைவர்கள் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பன்னீர் செல்வத்தை சந்திக்கவில்லை.

ஆனால் புதுவை முதல்வர் ரங்கசாமி தற்போது நடிகர் விஜய் யை சந்தித்தஹ்டு குறித்து அதிமுக வினர் கடும் விமர்சனம் செய்து வருகின்றனர்.   இது குறித்து அதிமுகவினர், “புதுவை மக்கள் மீது முதல்வர் ரங்கசாமிக்குச் சிறிதளவு, அக்கறை இல்லையா? அவருக்கு மாநிலத்தின் வளர்ச்சி திட்டத்திற்காக பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்களைச் சந்திக்க நேரம் இல்லை.

அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் ஓ பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமியை சந்தித்து நன்றி தெரிவிக்கக் கூட வழி தெரியவில்லை.  ஆனால் நடிகரை மட்டும் மரியாதை நிமித்தமாகச் சந்திக்க நேரம் இருக்கிறதா.?” எனக் கேள்விகள் எழுப்பி உள்ளனர்.

இது குறித்து புதுவை உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் அளித்துள்ள பதிலில்,

“புதுச்சேரி முதல்வர் யாரை வேண்டுமானாலும் சந்திக்கலாம்.  அவை அவருடைய தனிப்பட்ட விவகாரம் ஆகும்.  முதல்வர் நடிகர் விஜய் யை கூட்டணி தொடர்பாகச் சந்தித்ததாக  ஏதும் கூறவில்லை.   அவர் அரசியல் ரீதியாக சந்தித்தாரா என்னும் அதிமுகவின் ஊகங்களுக்கு நாங்கள் பதில் தர முடியாது” 

எனத் தெரிவித்துள்ளார்.