காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் வேட்பு மனு பரிசீலனையின் போது பாஜக பிரமுகர் ஒருவர் காவல்துறையினரிடம் கடும் விவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

கடந்த 28 ஆம் தேதி முதல் காஞ்சிபுரம் நகராட்சியில் உள்ள 51வார்டுகளுக்கான வேட்புமனுத் தாக்கல் தொடங்கி 4 ஆம் தேதி முடிவடைந்தது.   காஞ்சியில் மொத்தம் 229 பேர் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளனர். நேற்று மாநகராட்சி அலுவலகத்தில் காவல்துறையினரின் பலத்த காவலுடன் வேட்பு மனு பரிசீலனை தொடங்கியது

வேட்புமனு பரிசீலனையின் போது வேட்பாளர் அல்லது வேட்பாளரை முன்மொழிந்தவர் ஆகியோரில் ஒருவரை மட்டுமே அனுமதிக்கப்படுவது தேர்தல் விதிமுறையாகும்.   காஞ்சிபுரம் மாநகராட்சியில் 19 ஆம் வார்டு உறுப்பினர் பதவிக்கு பாஜக சார்பில் போட்டியிடும் கோமதி ஜகதீசன் வந்தார்.  அவருடன் அவரை முன்மொழிந்த பாஜக தலைவரும் அவர் கணவருமான ஜகதீசனும் உடன் வந்தார்.

இருவருமாக வேட்பு மனு பரிசீலனையின் போது உள்ளே செல்ல முயன்றதால் காவல்துறையினர் அவர்களை த்டுத்து நிறுத்தினார்கள்.   இருவரில் ஒருவர் மட்டுமே செல்ல முடியும் என்பதை விளக்கிக் கூறி வேட்பாளரை மட்டும் அனுமதித்தனர்.   இதனால் பாஜக பிரமுகர் ஜகதீசனுக்கு கடும் கோபம் ஏற்பட்டுள்ளது.

காஞ்சி டிஎஸ்பி ஜூலியஸ் சீசரிடம் ஜகதீசன் கடும் விவாதம் செய்தார்.   அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது.  அங்கிருந்த பாஜகவினர் கண்டன கோஷங்களை எழுப்பிவிட்டு கலைந்து சென்றுள்ளனர்.  ,மத்தியில் ஆளும் கட்சியினர் இவ்வாறு தேர்தல் விதிகளை மீறி காவல்துறையினருடன் விவாதம் செய்தது மக்களிடையே அதிருப்தியை உண்டாக்கி உள்ளது.