புதுச்சேரி: கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் உள்ளதால், புதுச்சேரி மாநில முழுவதும் இன்று ல் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகள் மற்றும் அனைத்து வகையான கல்லூரிகளும் இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. மாணாக்கர்கள் ஆர்வமுடன் பள்ளிகளுக்கு வந்துள்ளனர்.
புதுச்சேரியில் கடந்த ஜனவரி மாதம் திறக்கப்பட்ட திறக்கப்பட்ட பள்ளி, கல்லூரிகள் கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக, ஜனவரி 10ந்தேதி பள்ளிகளை மூட மாநில அரசு உத்தரவிட்டது. அதைத்தொடர்ந்து ஆன்லைன் வகுப்புகள் தொடர்ந்தன.
இந்த நிலையில், தற்போதுகொரோனா பரவல் கட்டுக்குள் இருப்பதால், பிப்ரவரி 4ந்தேதி முதல் (இன்று) பள்ளிகள் திறக்கப்படுவதாகவும், வாரத்தில் 6 நாட்களும் பள்ளிகள் முழுமையாக செயல்படும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.
அதன்படி, இன்று புதுவையில் 1-ம் வகுப்பு முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. மாணவ மாணவிகள் ஆர்வமுடன் பள்ளிகளுக்கு வந்துள்ளனர். பெற்றோர்களும் தங்களது குழந்தைகளை பள்ளிகளுக்கு கொண்டு வந்து விட்டுச்சென்றனர். பள்ளிகளில் நீண்ட நாட்களுக்கு தங்களது நண்பர்களை பார்த்த மாணாக்கர்கள் மகிழ்ச்சியுடன் அளவளாவினர்.
அதே வேளையில், பள்ளிக்கு வராத மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.