சென்னை: கடந்த 4 மாதங்களில் 4,717 சட்டவிரோத பேனர்கள் அகற்றப்பட்டு உள்ளதாக பேனர்கள் தொடர்பான வழக்கில் தமிழக அரசு நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

தமிழ்நாட்டில் சட்டவிரோத பேனர்கள் வைக்கப்படுவது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே நடைபெற்ற விசாரணையின்போது, தமிழ்நாட்டில் சட்டவிரோதமாக பேனர் வைத்தது தொடர்பாக இதுவரை எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன? அந்த வழக்குகளின் தற்போதைய நிலை என்ன என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி மற்றும் நீதிபதிபி.டி.ஆதிகேசவலு  அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமைச் செயலர்பிரபாகர் சார்பில் கூடுதல் அரசுதலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி பேனர் தொடர்பான அறிக்கை தாக்கல்செய்தார்.

பேனர்கள் வைப்பதற்கு உரிமம் வழங்குவது தொடர்பான விதிகளை கண்டிப்பாக பின்பற்றும்படிமாவட்ட ஆட்சியர்கள், மாநகராட்சி, நகராட்சி ஆணையர்கள், பேரூராட்சி அலுவலர்களுக்கும், தமிழக டிஜிபி-க்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

டந்த 2016-ம்ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை சட்டவிரோதமாக பேனர்கள்வைத்தது தொடர்பாக 10,926 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.  2021 அக்டோபர் முதல் ஜன.31 வரை உள்ள கடந்த  4 மாதங்களில் தமிழகம் முழுவதும் 4,717சட்டவிரோத பேனர்கள் அகற்றப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையடுத்து நீதிபதிகள், பேனர்கள் அகற்றும் செலவை சம்பந்தப்பட்டவர்களிடம் வசூலிக்க அறிவுறுத்தி, விசாரணையை பிப்ரவரி 18ந்தேதிக்கு  தள்ளி வைத்து உத்தரவிட்டனர்.