டெல்லி: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் நாடாளுமன்றத்தில் மத்திய நிதிநிலை அறிக்கையை வாசித்து வருகிறார்.

2025-2026ஆம் நிதியாண்டிற்குள் கணக்கு பற்றாக்குறையை குறைக்க நடவடிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், வரும் நிதியாண்டின் கணக்குப் பற்றாக்குறை 6.4%ஆக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றுக்கு மத்தியிலும் ஜி.எஸ்.டி. வசூல் அதிகரித்துள்ளது என்று தெரிவித்துள்ள நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2022 ஜனவரி மாதத்தில், ஜிஎஸ்டி மூலம் ரூ.1.40 லட்சம் கோடி வரி வருவாய் கிடைத்துள்ளது என்றும்,  வரி செலுத்தும் மக்களுக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன் என்று கூறி மகாபாரதத்தில் உள்ள வரிகளை மேற்கோள் காட்டி பேசினார். மேலும், 

வரி செலுத்தும் போது ஏற்படும் தவறுகளை சரி செய்து கொள்ளும் வகையில், வரி செலுத்துபவர்களுக்கு வாய்ப்புகள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இரண்டு ஆண்டுகளில் திருத்தப்பட்ட வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய புதிய வசதி வழி வகை செய்யும் என்றும் அமைச்சர் அறிவித்துள்ளார்.

ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கான வரிச்சலுகை அடுத்தாண்டு மார்ச் வரையில் நீட்டிப்பு செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளதுடன், பெருநிறுவங்களுக்கான வரி 12%லிருந்து 7%ஆக குறைக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார். 

கூட்டுறவு சங்கங்களுக்கான மாற்றுவரி 15% ஆக குறைக்கப்பட்டுள்ளது என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்டுறவு சங்கங்கள் செலுத்தும் வரி 18%லிருந்து 15%ஆக குறைக்கப்படும். கூட்டுறவு சங்கங்கள் செலுத்தும் கூடுதல் வரியில் 5% குறைக்கப்படும்

டிஜிட்டல் கரன்சியை ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்யும் என்றும் அதற்காக ஆர்.பி.ஐ. விதிமுறைகளில் மாற்றம் செய்யப்பட்டு 2023ம் ஆண்டில் டிஜிட்டல் கரன்சி அறிமுகம் செய்யப்படும் என்று நிதி அமைச்சர் அறிவித்துள்ளார்.

அதன்படி டிஜிட்டல் மூலமான வருவாய்க்கு 30% வரி விதிக்கப்படுவதாகவும், பிட்காயின் போன்ற டிஜிட்டல் சொத்துகள் மூலம் ஈட்டப்படும் வருவாய்க்கு 30% வரி விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

விர்ச்சுவல் மூலதன சொத்துகள் மீதான வரியில் 1% TDS வழங்கப்படும் என்றும், பங்குகள் மூலமான வருமானத்திற்கு பெறப்படும் மூலதன ஆதாய வரியில் கூடுதல் வரி 15%ஆக இருக்கும் என்றும் நிதியமைச்சர் தெரிவித்து உள்ளார்.

2025ம் ஆண்டுக்குள் அனைத்து கிராமங்களிலும் ஃபைபர் ஆப்டிக் மூலம் இணைய வசதி ஏற்படுத்தப்படும் என்றும், அனைத்து கிராமங்களிலும் பொது மற்றும் தனியார் துறை பங்களிப்பில் இணைய வசதி ஏற்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு  உள்ளது.

மின்சார வாகனங்களின் உற்பத்தி ஊக்குவிக்கப்படும். மேலும் சார்ஜ் போடுவதற்கு பதிலாக பேட்டரி மாற்றும் வசதிகள் ஏற்படுத்துவதை உறுதி செய்ய கொள்கை ரீதியாக மாற்றங்கள் கொண்டு வரப்படும் என்றும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.