சென்னை: தமிழகத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு திருத்தப்பட்ட புதிய திருப்புதல் தேர்வு (Revision Test) அட்டவணையை தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது.

கொரோனா தொற்று பரவல் காரணமாக மீண்டும் மூடப்பட்டுள்ள கல்வி நிலையங்கள் பிப்ரவரி 1ந்தேதி முதல் முழுமையாக திறக்கப்படுகிறது. இதையொட்டி, தமிழகத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு திருத்தப்பட்ட புதிய அட்டவணையை தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் திருப்புதல் தேர்வு பிப்ரவரி 9 முதல் 15 ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2 ஆவது திருப்புதல் தேர்வு மார்ச் 28 முதல் ஏப்ரல் 4 ஆம் தேதி வரை நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் திருப்புதல் தேர்வு பிப்ரவரி 9 முதல் 16 ஆம் தேதி வரையிலும், 2 ஆவது திருப்புதல் தேர்வு மார்ச் 28 முதல் ஏப்ரல் 5 ஆம் தேதி வரை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
[youtube-feed feed=1]