பெங்களூரு: கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா பேத்தியின் உடல் இறந்த நிலையில் அவரது குடியிருப்பில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடக மாநில பாஜக தலைவராகவும், மாநில முன்னாள் முதல்வராகவும் இருந்தவர் பிஎஸ் எடியூரப்பா. இவரது மூத்த மகள் பத்மா. இவரது மகள் டாக்டர் சவுந்தர்யா. இவர் பெங்களூரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்துவந்த நிலையில், இன்று சடலமாக மீட்கப்பட்டார்.
தற்போது 30 வயதாகும் சவுந்தர்யா மருத்துவம் படித்தவர். இவருக்கு கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில், அவர் வசித்து வந்த அடுமாடி குடியிருப்பில் உள்ள வீட்டில், தூக்கில் தொங்கிய நிலையில் சடலாமாக மீட்கப்பட்டார். இவரது மரணம் , தற்கொலை என சந்தேகிக்கப்படுகிறது. “இயற்கைக்கு மாறான மரணம்” என போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.