2018 – 19 ம் ஆண்டில் 2904 கோடி ரூபாயாக இருந்த பா.ஜ.க. வின் சொத்து மதிப்பு 2019 – 20 ம் ஆண்டில் ரூ. 4,847.78 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது, இது கடந்த ஆண்டை விட ரூ. 1944 கோடி அதிகம்.
2019 – 20 ம் ஆண்டுக்கான சொத்து விவரங்களை அரசியல் கட்சிகள் தாக்கல் செய்துள்ளன, 7 தேசிய கட்சிகளின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 6,988.57 அதில் பா.ஜ.க.வுக்கு மட்டுமே 69.37 சதவீத சொத்து உள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (Association for Democratic Reforms – ADR) வெளியிட்டிருக்கும் இந்த புள்ளிவிவரப்படி இரண்டாவது இடத்தில் பகுஜன் சமாஜ் கட்சி உள்ளது, இதன் சொத்து மதிப்பு ரூ. 698.33 (9.99%).
588.16 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் காங்கிரஸ் கட்சி மூன்றாவது இடத்தில் உள்ளது இது மொத்த மதிப்பில் 8.42 சதவீதம் ஆகும்.
44 மாநில கட்சிகளில் முதல் 10 கட்சிகளிடம் மட்டும் 95.27 சதவீதம் அதாவது ரூ. 2,028.715 கோடி உள்ளது. பிராந்திய கட்சிகளின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 2,129.38 கோடி.
இதில், சமாஜ்வாதி கட்சிக்கு ரூ. 563.47 கோடியும், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சிக்கு ரூ. 301.47 கோடியும் அ.இ.அ.தி.மு.க. விற்கு ரூ. 267.61 கோடியும் உள்ளது.
அ.இ.அ.தி.மு.க. விற்கு வைப்புத் தொகையாக மட்டும் ரூ. 246.90 கோடி ரூபாய் உள்ளதாகவும் தி.மு.க. விற்கு ரூ. 162.425 கோடி ரூபாய் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநில கட்சிகளில் ரூ. 184.24 கோடி சொத்துக்களுடன் ஆறாவது இடத்தில் தி.மு.க. உள்ளது.